ஓய்வூதிய திட்டம் குறித்து நாளை மறுதினம் விழிப்புணர்வு கூட்டம்
ஓய்வூதிய திட்டம் குறித்து நாளை மறுதினம் விழிப்புணர்வு கூட்டம்
UPDATED : நவ 17, 2026 10:24 PM
ADDED : நவ 17, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வங்கியாளர் கூட்டமைப்புடன் சார்பில், அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து நாளை மறுதினம் (19ம் தேதி) விழிப்புணர்வு மற்றும் சீராய்வு கூட்டம் நடக்கிறது.
புதுச்சேரி ஓட்டல் சிவகவி ஐகானிக் வளாகத்தில், நாளை மறுதினம் (19ம் தேதி) கூட்டம் நடக்கிறது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கங்கள், சிறப்பம்சங்கள், பங்களிப்புத் தொகை மற்றும் ஓய்வூதியப் பலன்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
இதில், வங்கிகளின் பிரதிநிதிகள், வணிகத் தொடர்பாளர்கள், திட்டப் பயனாளிகள் பங்கேற்கின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்து பயனாளிகள் பயன் பெறுமாறு வங்கியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
