sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நாளை மாலையுடன் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம்... ஓய்கிறது; இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்

/

நாளை மாலையுடன் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம்... ஓய்கிறது; இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்

நாளை மாலையுடன் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம்... ஓய்கிறது; இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்

நாளை மாலையுடன் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம்... ஓய்கிறது; இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்


ADDED : ஏப் 16, 2024 05:34 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : லோக்சபா தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால், இறுதிகட்ட ஓட்டு சேகரிப்பு பணியை வேட்பாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். ஓட்டுப் பதிவு, வரும் 19ம் தேதி காலை 7.00 மணி முதல், மாலை 6.00 மணி வரை நடக்கிறது.

தொகுதியில் ஆண்கள் 4,80,569, பெண்கள் 5,42,979, மூன்றாம் பாலினத்தவர் 151 என மொத்தம் 10,23,699 வாக்காளர்கள், தங்களுடைய ஓட்டுகளைப் பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர்.

பிரசாரம் நாளை ஓய்கிறது


லோக்சபா தேர்தலில் எப்படியும் வெற்றிவாகை சூட வேண்டும் என்று உறுதிபூண்டுள்ள வேட்பாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த மாதம் 20ம் தேதி முதல் பம்பரமாக சுழன்று சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தேர்தல் நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு பிரசாரம் ஓயும். எனவே நாளை 17ம் தேதி மாலை 6.00 மணியுடன் வேட்பாளர்களின் அனைத்து வகை தேர்தல் பிரசார பணிகளும் முடிவடைகிறது.

அதன்பிறகு, வேட்பா ளர்களை ஆதரித்து பொதுக் கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மின்னணு சாதனங்கள் மூலம் பிரசாரம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாவம் மதுபான பிரியர்கள்


தேர்தலையொட்டி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத் தில் உள்ள அனைத்து வகை மதுபார்களும், மது கடைகளும் ஏப்ரல் 17ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4ம் தேதியும் அனைத்து மதுகடைகளை மூட வேண்டும் என கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், தாக சாந்திக்காக சரக்குகளை முன்கூட்டியே வாங்கி 'ஸ்டாக்' வைக்கும் வேலையில் குடி பிரியர்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

இறுதி கட்டம்


லோக்சபா தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால், இன்றும் (16ம் தேதி) நாளையும் (17ம் தேதி) வேட்பாளர்கள் தங்களது இறுதிகட்ட அனல் பறக்கும் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, திறந்த வேனில் கும்பிடுபோட்டபடி, நகரம், கிராமங்களில் ஊர் ஊராக பைக்கில் பேரணியாக சென்று ஆதரவு திரட்டுவதில் வேட்பாளர்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

பிரசாரம் நிறைவடையும்போது இறுதி கட்டத்தில், வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

நான்குமுனை போட்டி


புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடங்கியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு முதல் லோக்சபா தேர்தல் 1963ம் ஆண்டில் தான் நடந்தது. புதுச்சேரி லோக்சபா தொகுதி காங்., கட்சியின் கோட்டையாக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை 15 லோக்சபா தேர்தல் 1 இடைத் தேர்தல்களில் நடந்துள்ளது.

இதில் காங்., கட்சி 11 முறை வெற்றி வாகை சூடியுள்ளது. அடுத்து இரண்டுமுறை அ.தி.மு.க., ஜெயித்துள்ளது. தி.மு.க., ஆளும் கட்சியான என்.ஆர்.காங்., பா.ம.க., தலா ஒருமுறை வென்றுள்ளன. கடந்த தேர்தல்களில் இரு முனை அல்லது மும்முனை போட்டியையே புதுச்சேரி சந்தித்து வந்துள்ளது. தற்போது நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால், சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு


பிரதான கட்சிகளான காங்., - பா.ஜ., உள்ளிட்ட தேசிய கட்சிகள், அ.தி.மு.க., உள்ளிட்ட மாநில கட்சிகள் அனைத்தும் தனித்தனியே போட்டியிடுவதால், கட்சிகளின் உண்மையான செல்வாக்கு, ஓட்டு வங்கி விபரங்கள் வெளிச்சத்திற்கு வர உள்ளது. இதனால், புதுச்சேரி அரசியல் கட்சிகள், தொண்டர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பும், பொதுமக்களிடையே ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

கரன்சி கொடுத்தா கால் பண்ணுங்க

தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை யடுத்து, இன்று முதல் கரன்சிகளை அள்ளி வீச, அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.இதற்கு கடிவாளமிடும் வகையில், தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும்வகையில், தேர்தல் கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பணம் பட்டுவாடா தெரிந்தால், 1950 இலவச தொலைபேசி எண்ணில் அல்லது சிவிஜில் செய லியில் புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us