/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை ... இறுதி வாய்ப்பு: முதலில் வருபவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை
/
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை ... இறுதி வாய்ப்பு: முதலில் வருபவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை ... இறுதி வாய்ப்பு: முதலில் வருபவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை ... இறுதி வாய்ப்பு: முதலில் வருபவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை
ADDED : செப் 29, 2025 02:58 AM

புதுச்சேரி: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான இறுதி காலக்கெடு நாளையுடன் நிறைவு பெறுகிறது. சான்றிதழ்களுடன் முதலில் வருபவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறையின் பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.,) 2025---26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மொத்தமுள்ள 1148 சீட்டுகளில் இதுவரை 712 இடங்கள் நிரம்பியுள்ளன. ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை 30 ம்தேதியுடன் ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை நிறைவு பெற உள்ளது.
ஐ.டி.ஐ.., தொழிலாளர் துறை பயிற்சி பிரிவி உதவி இயக்குநர் சரவணன் கூறும்போது, இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை 30 ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால், மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. இன்றும் நாளையும் இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு சேரலாம்.
புதுச்சேரியில் ஐ.டி.ஐ.,க்கள் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம் (மகளிர் மட்டும்), வில்லியனூர், நெட்டப்பாக்கம், பாகூர் இயங்கி வருகின்றன. காரைக்காலில் திருமலைராயன் பட்டினத்திலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி ஐ.டி.ஐ., செயல்படுகின்றன. மாகேவில் கிழக்கு பள்ளூரிலும், ஏனாமிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி, பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம்.
குறைந்த அளவிலான இடங்களே காலியாக உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
என்ன படிப்புகள் டிரோன் டெக்னிஷியன் , மின்சார வாகன மெக்கானிக், சோலார் பேனல் பொருத்துபவர், எலெக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் ஆபரேடர், பிட்டர், ஒயர்மேன், குளிர்சாதன டெக்னிஷியன், மேசன், வெல்டர், சமையல் கலை, கட்டடப் பட வரைவாளர், தையல் தொழில்நுட்பம், அழகுக்கலை, மோட்டார் வாகன மெக்கானிக் போன்ற பல்வேறு தொழில் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கின்றது.
சலுகைகள் இந்த பயிற்சிகளில் சேரும் மாணவியர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
மாதத்திற்கு உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். அனைத்து பாடப் புத்தகங்களும் வழங்குவதுடன், ஒவ்வொரு பயிற்சிப் பிரிவிலும் தகுதித் தேர்வில் முதலிடம் பெறுபவருக்கு, ஊக்கத்தொகையாக கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.