ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை மறுதினம் திருக்கல்யாணம்
ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை மறுதினம் திருக்கல்யாணம்
UPDATED : நவ 14, 2026 10:05 PM
ADDED : நவ 14, 2026 07:54 PM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வேல் வாங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது.
நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா சன்னதியில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது.
அன்று முதல் தினமும் காலை சுவாமிக்கு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. இன்று வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (நவ.15) இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுதினம் இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8:00 மணிக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உற்சவம், 17ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
