தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 6 பேர் கைது

ரகளை செய்த 6 பேர் கைது

ரகளை செய்த 6 பேர் கைது


ADDED : நவ 14, 2026 07:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 07:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மடுகரை போலீசார் நேற்று (நவ.,13) ரோந்து சென்றனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த் ராஜேஷ், 36, என்பவர் மதுபோதையில் மடுகரை – பட்டாம்பாக்கம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல், கரிக்கலாம்பாக்கத்தில் தகராறில் ஈடுப்பட்ட அரங்கனுார் தேவேந்திரன், 46; திருபுவனையில் தகராறு செய்த வளவனுார் வேலு, 42; அஜித்குமார், 28; வில்லியனுாரில் தகராறு செய்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 31; பாலச்சந்திரன், 30; பட்டுக்கோட்டை பண்ணைவயல் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன், 28, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us