/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா ரோடு ஷோ குழுவினர் அமைச்சருடன் சந்திப்பு
/
சுற்றுலா ரோடு ஷோ குழுவினர் அமைச்சருடன் சந்திப்பு
ADDED : செப் 15, 2025 02:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத் துறை, மத்திய வெளியுறவு அமைச்சகம், சென்னை தென்னிந்திய சுற்றுலா பிராந்திய அலுவலகம் சார்பில், சுற்றுலா ரோடுஷோ 2 நாட்கள் நடந்தது.
புதுச்சேரி துறைமுக வளாகத்தில் உள்ள மாநாடு அரங்கில் துவங்கிய நிகழ்ச்சியில், இந்திய சுற்றுலா துறையின் தென்னிந்திய பிராந்திய இயக்குநர் வெங்கடேசன், சுற்றுலாத் துறை செயலர் மணிகண்டன், பாஸ்போர்ட் அதிகாரி விஜயக்குமார் ஆகியோர் சுற்றுலாவின் சிறப்பு அம்சங்கள், வர்த்தக வாய்ப்புகள், பிரான்ஸ் - புதுச்சேரி மக்களின் உறவுகள், உலக அரங்கில் புதுச்சேரி சுற்றுலாவின் முக்கியத்துவம், ஆன்மிகம், சகோதரத்துவம், போக்குவரத்து மற்றும் வசதிகள் குறித்துவிளக்கினர்.
இதில், புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உட்பட தென்னிந்தியாவின் 60 சிறந்த மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா வர்த்தகர்கள், சுற்றுலா தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
கைவினைக் கலைஞர்களின் 20க்கும் மேற்பட்ட அரங்குகள்அமைக்கப்பட்டிருந்தன. பாரதியார் பல்கலைக் கூட மாணவிகள் மற்றும் ஆரோவில் சுரம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, சுற்றுலா தொழில் முனைவோர், அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து கலந்துரையாடினர். தலைமை செயலர் சரத் சவுகான் உடனிருந்தார்.