புதுச்சேரி வந்த சுற்றுலா பயணி அதிகமாக மது குடித்து சாவு
புதுச்சேரி வந்த சுற்றுலா பயணி அதிகமாக மது குடித்து சாவு
ADDED : ஜூன் 10, 2026 04:46 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சுற்றி பார்க்க வந்தவர் அதிகமாக மது குடித்து பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், நல்லுார் நேதாஜி தெருவை சேர்ந்தவர் சூர்யா, 27; பெட்ரோல் பங்க் ஊழியர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரியங்கா 25, என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் சூர்யா, தனது நண்பர்கள் உதய பிரகாஷ், அருண்குமார், குமரேசன், விஜய் ஆகியோருடன் நேற்று முன்தினம் புதுச்சேரியை சுற்றி பார்க்க வந்தார். அவர்கள், புதிய பஸ் நிலையம் அருகில் தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் இரவு சூர்யா தனது நண்பர்களுடன் மதுகுடித்தார்.
அப்போது அளவுக்கு அதிகமாக மதுகுடித்த சூர்யா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
அவரை சக நண்பர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின்பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
