/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டூரிஸ்ட் வேனுக்கு அபராதம் விதிப்பு
/
டூரிஸ்ட் வேனுக்கு அபராதம் விதிப்பு
ADDED : ஜூலை 08, 2025 06:21 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் டூரிஸ்ட் வேனில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை அழைத்து சென்ற டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவன வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆட்டோக்களில் அனுமதிக்ப்பட்ட மாணவர்களை விட அதிகமாக ஏற்றி செல்வதாகவும், மாணவர்களை டூரிஸ்ட் வேனில் அழைத்து செல்லப்படுவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போக்குவரத்து துறை ஆர்.டி.ஓ. பிரபாகரன் ராவ் தலைமையில் ஆய்வாளர்கள் கடலூர் சாலையில், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்களை சோதனை செய்தனர். அதில் விதிமுறைகளை மீறி மாணவர்களை ஏற்றி வந்த டூரிஸ்ட் வேன் டிரைவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கிய டிரைவர்களுக்கும், சீருடை அணியாமல் வந்த டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர்.