ADDED : டிச 27, 2025 05:05 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கடலுார் சாலை நோணாங்குப்பம் படகு குழாமில், படகு சவாரி செய்ய வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்று கிழமைகள் என, தொடர் விடுமுறை என்பதால் நேற்று படகு குழாமில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
போதிய படகுகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பின், படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் வந்த கார்கள் படகு குழாமில் உள்ள பார்க்கிங்கில் விட இடம் இல்லாததால், கடலுார் சாலை, பழைய நோணாங்குப்பம் ஆற்று பாலங்களில் நிறுத்திச் சென்றனர். இதனால், நோணாங்குப்பம் ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
