/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுட்டேரி படகு குழாம் 'பாழ்' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
ஊசுட்டேரி படகு குழாம் 'பாழ்' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஊசுட்டேரி படகு குழாம் 'பாழ்' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஊசுட்டேரி படகு குழாம் 'பாழ்' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஜன 02, 2025 06:41 AM

புதுச்சேரி: புத்தாண்டில் ஊசுட்டேரி படகு குழாமில் படகு சவாரி செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
புதுச்சேரியின் மிகப்பெரிய நீர் ஆதாரமான ஊசுட்டேரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
இதில், 410 ஹெக்டேர் தமிழக பகுதியிலும், 390 ஹெக்டேர் நில பரப்பு புதுச்சேரியில் அமைந்துள்ளது. ஊசுட்டேரி இயற்கையுடன் இணைந்த பகுதி என்பதால், ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இங்கு தங்கி செல்கின்றன.
மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பூ நாரை, உண்ணிக்கொக்கு, கரண்டிவாயன், காட்டு வாத்து, புள்ளி மூக்கு வாத்து, கருநீர்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் கூழைக்கடா உள்ளிட்ட 250க்கும் அதிக வகையிலான 10 ஆயிரம் பறவைகள் ஆண்டு தோறும் ஊசுட்டேரிக்கு வந்து செல்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க பத்துகண்ணு சாலையோரம் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கடல் போல் பரந்து விரிந்து காணப்படும் ஏரியின் அழகையும், ஆங்காங்கே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மண் திட்டுகளில் வெளிநாட்டு பறவைகள் இறை தேடும் அழகை காண, சுற்றுலா வளர்ச்சி கழகம் (பி.டி.டி.சி.,) மூலம் ஊசுட்டேரியில் படகு சவாரி இயங்கி வந்தது.
கடந்த பெஞ்சல் புயலின்போது, முன்னெச்சரிகையாகபடகுகளை கரைக்கு கொண்டு பாதுகாக்க தவறிவிட்டனர்.
ஏரியில் கட்டி வைத்திருந்த படகுகள்அனைத்தும் புயலில் சிக்கி சின்னாபின்னமாக உடைந்தது.
பழுதான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் ஊசுட்டேரி வந்தனர். அவர்கள், படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

