ADDED : ஜன 02, 2026 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாம், ஈடன் பீச்சில் புத்தாண்டு நிகழ்ச்சி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஆண்டுதோறும் நோணாங்குப்பம் படகு குழாம், சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச்சில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச், நோணாங்குப்பம் படகு குழாமில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்படவில்லை.
இங்கு நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில், புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாததால், ஏமாற்றமடைந்தனர்.

