ADDED : ஜூன் 29, 2026 02:50 AM

அ நிறம் | அளவு
வானுார்: புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, உருண்டை வடிவிலான மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடந்த, 26ம் மொகரம் பண்டிகை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 தினங்களாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் ஆரோவில் பகுதிக்கு படையெடுத்தனர். மாத்திர் மந்திரை 'வியூ பாயிண்ட்' பகுதியில் இருந்து பார்வையிட்டனர். வெள்ளிக்கிழமை அன்று 1,854 பேர், நேற்று முன்தினம் 2,500 பேர், நேற்று 3,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக ஆரோவில் நிர்வாகம் தெரிவித்தது.
