/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரடைஸ் பீச்சில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

ADDED : டிச 31, 2024 05:46 AM
அரியாங்குப்பம்: படகில் சென்று பாரடைஸ் பீச்சில் புத்தாண்டு கொண்டா சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.
புத்தாண்டை கொண்டா, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வந்துள்ளனர். புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில், அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், தவளக்குப்பம் அடுத்த புதுகுப்பம், நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து படகில் சென்று சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சில், கடந்த 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டினர். நள்ளிரவுக்கு பின், சுற்றுலா பயணிகளை படகில் அழைத்து வருவதில், பிரச்னை ஏற்பட்டது.
அதனால், கடந்த ஆண்டு போல, இந்தாண்டும், பாதுகாப்பு கருதி, பாரடைஸ் பீச்சில் படகில் சென்று புத்தாண்டு கொண்டா, சுற்றுலாத்துறை அனுமதி வழங்கவில்லை.
அதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.