/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மே 20ல் பந்த் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
/
புதுச்சேரியில் மே 20ல் பந்த் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் மே 20ல் பந்த் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் மே 20ல் பந்த் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ADDED : மே 04, 2025 02:26 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் வரும் 20ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதாக அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் வரும் 20ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நடந்தது. மாநில பொதுச்செயலர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தை மே 20ம் தேதி நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போராட்டத்தை விளக்கி, வரும், 6ம் தேதி சுதேசி மில் அருகே கருத்தரங்கம் நடத்துவது, 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை வாகன பிரசாரம் மேற்கொள்வது, 20ம் தேதி புதுச்சேரியில் ராஜா தியேட்டர், சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனுார், வில்லியனுார், அரியாங்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய இடங்களில் மறியல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

