ADDED : ஜன 22, 2025 04:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். அபிஷேகம்,தினேஷ் பொன்னையா,அந்தோணி, சீனுவாசன், பிரபுராஜ், தினேஷ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 5ம் தேதி சுதேசி மில் அருகே, மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.
இதைக் கண்டித்து வரும் 26ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் நடக்கும் டிராக்டர் பேரணிக்கு தொழிற்சங்க அமைப்புகள் ஆதரவு அளிப்பதுடன், பேரணியில் பங்கேற்க தொழிற்சங்க அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.