/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 20, 2025 11:43 PM

புதுச்சேரி : புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., செயலார் சீனுவாசன், ஐ.என்.டி.யு.சி., பொதுச் செயலாளர் ஞானசேகரன், எல்.பி.எப் அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் ஒப்பந்த தொழிலாளர் திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட 21 கோரிக்கைள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அதே போல, கருவடிக்குப்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். எஸ்.யு.சி.ஐ., மாநில செயலாளர் லெனின்துரை, நடைபாதை வியாபாரிகள் சங்க சீனு உட்பட பலர் பங்கேற்றனர்.