/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்; தொ.மு.ச., நிர்வாகிகள் ஆலோசனை
/
தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்; தொ.மு.ச., நிர்வாகிகள் ஆலோசனை
தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்; தொ.மு.ச., நிர்வாகிகள் ஆலோசனை
தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்; தொ.மு.ச., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : பிப் 16, 2024 07:13 AM

புதுச்சேரி, : மத்திய அரசை கண்டித்து, தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய போராட்டம் இன்று நடக்கிறது.
புதுச்சேரியில் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவது தொடர்பாக, தி.மு.க., தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தொ.மு.ச., கவுரவத் தலைவரும், தி.மு.க., அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
தொ.மு.ச., தலைவர் அண்ணா அடைக்கலம் வரவேற்றார்.
கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டத்தை புதுச்சேரியில் எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்றும், தொ.மு.ச., தலைமையில் நடக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, நெசவாளர் அணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.