/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடியை கைது செய்ய வணிகர்கள் கூட்டமைப்பு பைக் பேரணி: கவர்னர், முதல்வரிடம் மனு
/
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடியை கைது செய்ய வணிகர்கள் கூட்டமைப்பு பைக் பேரணி: கவர்னர், முதல்வரிடம் மனு
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடியை கைது செய்ய வணிகர்கள் கூட்டமைப்பு பைக் பேரணி: கவர்னர், முதல்வரிடம் மனு
எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடியை கைது செய்ய வணிகர்கள் கூட்டமைப்பு பைக் பேரணி: கவர்னர், முதல்வரிடம் மனு
ADDED : நவ 12, 2024 08:00 AM

கவர்னர், முதல்வரிடம் மனு
புதுச்சேரி: புதுச்சேரி எம்.எல்.ஏ.வை மிரட்டிய ரவுடியை கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் பேரணியாக சென்று கவர்னர், முதல்வர், டி.ஐ.ஜி., உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில், திலாஸ்பேட்டை ரவுடி ராமு, 35; சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். மற்ற கடைகளுக்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமித்து ராமு கடை நடத்தி வந்ததால் மற்ற வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. அப்பகுதி வியாபாரிகள், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சேர்மன் சிவசங்கரன் எம்.எல்.ஏ.,விடம் முறையிட்டனர்.
சிவசங்கரன் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதை அறிந்த ரவுடி ராமு, கடந்த 9 ம் தேதி சிவசங்கரன் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சென்று, ஜிப்மர் கடை விவகாரத்தில் தலையிட வேண்டாம். அப்படி தலையிட்டால் பலவற்றை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்து வந்தார்.
இது தொடர்பாக சிவசங்கரன் எம்.எல்.ஏ., ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவுடி ராமு மீது மிரட்டல் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை பைக் பேரணி துவங்கியது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி, சட்டசபை அருகே நிறைவு அடைந்தது.
அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்று கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
சிவசங்கரன் எம்.எல்.ஏ., தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு பல மாதங்களுக்கு முன்பு டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தார். ரவுடி மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து, நேற்று முதல் சிவசங்கரன் எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

