/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பாரம்பரிய உணவு கருத்தரங்கம்
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பாரம்பரிய உணவு கருத்தரங்கம்
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பாரம்பரிய உணவு கருத்தரங்கம்
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் பாரம்பரிய உணவு கருத்தரங்கம்
ADDED : அக் 04, 2024 03:31 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் 'நியூட்ரிசன் பெஸ்ட் 2024' என்ற - பாரம்பரிய உணவும் அதன் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
வெங்கடேஸ்வரா கல்வி குழும முதன்மை இயக்க அதிகாரி வித்யா தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.
மண்வாசனை பாரம்பரிய உணவுகள் மற்றும் பாரம்பரிய அரிசி ஆகியவற்றால் உலக சாதனை படைத்த மேனகா சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஆராய்ச்சி துறை இயக்குனர் பாபாதாசரி, கண்காணிப்பாளர் லோகநாதன், ஆராய்ச்சி துறை ஒருங்கிணைப்பாளர்கள் லதா, ரேவதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்கில் மருத்துவ கல்லுாரி, பல் மருத்துவம், செவிலியர், உடற்பயிற்சி சிகிச்சை, பாராமெடிக்கல் மாணவர்கள், பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.