sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரம்பரிய நெல் வகை உற்பத்தி பயிற்சி முகாம்

 பாரம்பரிய நெல் வகை உற்பத்தி பயிற்சி முகாம்

 பாரம்பரிய நெல் வகை உற்பத்தி பயிற்சி முகாம்


ADDED : டிச 16, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் உற்பத்தி மற்றும் மேம்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

வில்லியனுார் உழவர் உதவியகம் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், பாரம்பரிய நெல் வகைகளின் உற்பத்தி மற்றும் திறனை மேம்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் உறுவையாறு சாய்பாபா கோவிலில் நடந்தது.

முகாமிற்கு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார்.

திருக்காஞ்சி வேளாண் அலுவலர் தினகரன் நோக்க உரையாற்றினார். அரியூர் வேளாண் அலுவலர் சத்யன் வாழ்த்துரை வழங்கினார்.

பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, பாரம்பரிய நெற்பயிருக்கான உழவியல் தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். காரைக்கால் பஜன்கோ பூச்சியியல் துறை பேராசிரியர் காண்டீபன், பாரம்பரிய நெற்பயிருக்கான பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து எடுத்துரைத்தார்.

முகாமில் விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் சாகுபடி குறிப்புகள் குறித்த கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வில்லியனுார், அரியூர் மற்றும் திருக்காஞ்சி பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us