/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
/
பனை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 14, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : பாகூரில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.
பாகூர் எரிக்கரையில் பனை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. அதில் மூலமதகு அருகே கரையோரத்தில் இருந்த பனை மரம் நேற்றிரவு 8.30 மணிக்கு திடீரென சாலையின் குறுக்கே விழுந்து அந்தரத்தில் தொங்கியது.
இதனால், போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அப்புறப் படுத்திய பிறகு போக்கு வரத்து சீரானது.

