ஒயிட் டவுனில் போக்குவரத்து மாற்றம்: சீனியர் எஸ்.பி., திவ்யா தகவல்
ஒயிட் டவுனில் போக்குவரத்து மாற்றம்: சீனியர் எஸ்.பி., திவ்யா தகவல்
UPDATED : அக் 08, 2026 08:30 PM
ADDED : அக் 08, 2026 08:26 PM

புதுச்சேரி: புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன நிறுத்தங்களை முறைப்படுத்துவது தொடர்பான போக்குவரத்து போலீசார் – வணிகர்களுக்கான பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா தலைமை தாங்கினார். எஸ்.பி., ரச்சனா சிங் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப் இன்ஸ்பெக்டர்கள், துய்மாஸ் வீதியைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., திவ்யா பேசுகையில், ‘ஒயிட் டவுன் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, துய்மாஸ் வீதியில் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு, நடைபாதை மண்டலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும். அதற்கு, வணிகர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதனால், அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருதில் கொண்டு அவர்களுக்கு அடையாள அட்டையுடன் கூடிய ‘இ–-பாஸ்’ வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
