தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது


UPDATED : அக் 08, 2026 10:32 PM

ADDED : அக் 08, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:32 PM ADDED : அக் 08, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம் பண்டக சாலை தெருவில், லாட்டரி சீட் எண்களை வாட்ஸ் ஆப் மூலம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருப்பட்டினம் சிறப்பு சப் இனஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பண்டகசாலை தெருவில் உள்ள செருப்பு கடையில் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை வாட்ஸ் ஆப் மூலம் விற்பனை செய்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர், நிரவி தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார், 49, என்பதும், பொதுமக்களிடம் இருந்து மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, லாட்டரி சீட்டு 3 மற்றும் 4 இலக்க எண்களை வாட்ஸ் ஆப் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுக்குறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் 3,060 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us