UPDATED : அக் 08, 2026 10:31 PM
ADDED : அக் 08, 2026 08:44 PM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மின்துறை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் அறிவிக்கப்படாமல் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கொசுக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்வி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே போல அரியாங்குப்பம் பகுதியில் அடிக்கடி மின்நிறுத்தம் செய்யப்படுவதால், பொதுமக்கள் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் மின்வெட்டு கண்டித்தை நோணாங்குப்பம் பொதுமக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு அரியாங்குப்பம் மின்துறை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, அரியாங்குப்பம் மின்துறை உதவிப்பொறியாரிடம் மனு கொடுத்தனர்.
