/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி செஞ்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்
/
கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி செஞ்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்
கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி செஞ்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்
கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி செஞ்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : பிப் 10, 2025 06:34 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்கால் பாலம் சீரமைக்கும் பணியால், செஞ்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து எஸ்.பி., செல்வம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
பொதுப்பணித்துறை சார்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூலம், புதுச்சேரி லொரிஸ்தான் வீதி செஞ்சி சாலை சந்திப்பு முதல் நேரு வீதி சந்திப்பு வரை உள்ள கழிவு நீர் வாய்க்கால் பாலத்தை சீரமைக்கும் பணி, இன்று (10ம் தேதி) காலை முதல் மேற்கொள்ள இருப்பதால், செஞ்சி சாலையில், வாகன போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்படுகிறது.
அஜந்தா சந்திப்பில் இருந்து, செஞ்சி சாலை வழியாக புதுச்சேரி நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும், அஜந்தா சிக்னலில் இருந்து வலதுபுறம் திரும்பி, அண்ணா சாலை, 45 அடி சாலை, ஜிஆர்.டி. பகுதி அடைந்து, காமராஜர் சாலை வழியாக சென்று, திருவள்ளுவர் சாலை, நெல்லித்தோப்பு வழியாக மறைமலையடிகள் சாலை சென்று பஸ் நிலையம் அடைய வேண்டும்.
அஜந்தா சந்திப்பில் இருந்து, செஞ்சி சாலை வழியாக புதுச்சேரி நோக்கி வரும் பைக், ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள், செஞ்சி சாலையில் வைசியாள் வீதி அல்லது செயின்ட் கில்ஸ் வீதி சந்திப்பு மற்றும் செஞ்சி சாலை அரவிந்தர் வீதி அல்லது டூபே வீதி சந்திப்பில், இடது மற்றும் வலது பக்கம் திரும்பி செல்ல வேண்டும். பொதுமக்கள் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.