புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : மார் 29, 2026 07:30 PM
பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில் (31ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., பக்தவச்சலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி - கடலுார் சாலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நாளை செடல் உற்சவம் நடக்கிறது.
இவ்விழாவில், பக்தர்கள் அலகு குத்தி தேர் மற்றும் வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனால், புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நாளை 31ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கன்னியக்கோவில், முள்ளோடை மார்க்கமாக கடலுார் செல்ல வேண்டும்.
கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் முள்ளோடை ,- கன்னியகோவில், - விழுப்புரம் - -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று அபிஷேகப்பாக்கம், - தவளக்குப்பம் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
