/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
/
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூலை 18, 2025 05:14 AM
புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலையில் இன்று போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி., செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, கடலுார் சாலையில் நைனார்மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இன்று(18ம் தேதி)செடல் திருவிழா நடக்கிறது.
பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இன்று மதியம் 2:00 மணி முதல் புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம் வழியாக வில்லியனுார் சென்று, அங்கிருந்து இந்திரா சதுக்கம் வழியாக பஸ் ஸ்டாண்டிற்குசெல்ல வேண்டும்.
அதேபோல், புதுச்சேரியில் இருந்து கடலுார் செல்லும் வாகனங்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் திரும்பி நெல்லித்தோப்பு, இந்திரா சதுக்கம், வில்லியனுார், கரிக்கலாம்பாக்கம், அபிேஷகப்பாக்கம், தவளக்குப்பம் வழியாக கடலுார் சாலைக்கு செல்ல வேண்டும். அல்லது மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் அரும்பார்த்தபுரம் பை பாஸ் வழியாக வில்லியனுார், அபிேஷகப்பாக்கம், தவளக்குப்பம் வழியாக கடலுார் சாலைக்கு செல்ல வேண்டும்.
கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் இருசக்கர வாகனங்கள் முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து இடதுபக்கம் திரும்பி அரவிந்தர் நகர் வழியாக வேல்ராம்பேட் ஏரிக்கரை ரோடு, மரப்பாலம் சந்திப்பு வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும்.
அதேபோன்று, புதுச்சேரியில் இருந்து கடலுார் மார்க்கம் செல்லும் இருசக்கர வாகனங்கள் மரப்பாலம் சந்திப்பில் வலது பக்கம் திரும்பி வேல்ராம்பேட் ஏரிக்கரை ரோடு, அரவிந்தர் நகர், கொம்பாக்கம், முருங்கப்பாக்கம் வழியாக கடலுார் சாலையை சென்றடைய வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.