/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் அமல்
/
தீபாவளி நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் அமல்
ADDED : அக் 26, 2024 05:53 AM
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையொட்டி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி புதுச்சேரி, புதிய பஸ் நிலைத்தில் இருந்து வரும் அனைத்து, பஸ் கனரக வாகனங்களும், புஸ்சி வீதியில் நுழைந்து, வலதுபுறம் திரும்பி, சின்ன சுப்ராயபிள்ளை தெரு, வழியாக சென்று சுப்பையா சாலை, சோனாம்பாளையம் சந்திப்பு, எச்.எம்., காசிம் சாலை, எஸ்.வி.பி., சாலை அஜந்தா சந்திப்பு வழியாக முத்தியால்பேட்டை, காந்தி வீதி சாலை வழியாக செல்ல வேண்டும்.
அதே போல, இ.சி.ஆரில் இருந்து வரும், அனைத்து பஸ், கனரக வாகனங்களும், அஜந்தா சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி, எஸ்.வி.பி., சாலை, செஞ்சி சாலை வழியாக, சோனாம்பாளையம் சந்திப்பு, - சுப்பையா சாலை, பழைய பஸ் நிலையம் நோக்கி சென்று, இடதுபுறமாக திரும்பி, மறைமலைஅடிகள் சாலை - சி.வி., ரோடு வழியாக ஏ.எப்.டி. மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அடைய வேண்டும்.
நேற்று மாலை 4:00 மணி முதல், அனைத்து பஸ்கள்,கனரக வாகனங்களும், அண்ணா சாலையில் இருந்து, 45 அடி சாலை சந்திப்பு வரை, காமராஜ் சாலை பட்டாணிக் கடை சந்திப்பு முதல், ஜி.ஆர்.டி., சந்திப்பு வரை செல்ல தடை செய்யப்படுள்ளது.
மக்கள் கூட்டத்தை பொருத்து, 30ம் தேதி வரை, நேரு வீதிக்குள் வாகனங்களை அனுமதிப்பது படிப்படியாக தடை செய்யப்படும். எஸ்.எஸ்.பிள்ளை தெரு, பாரதி வீதி இடையே உள்ள செட்டி தெரு முதல் நீடராஜயப்பர் தெரு இடையே காந்தி ரோடு வரை உள்ள சாலைகளில், 30ம் தேதி வரை காலை 9:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை இரு சக்கர வாகனங்களை தவிர அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
வணிகர்கள் தங்கள் நிறுவனங்களின் சாலையை நோக்கி சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்த வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்கள் மற்றும் பொருட்கள் இருந்தால், அருகில் உள்ள போலீஸ் அதிகாரி அல்லது, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 112ல் தெரிவிக்கவும்.
சாலை பயணிகள் தங்கள் வாகன நிறுத்துமிடத்திற்காக நகரத்தில், நுழைவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கியூ ஆர். கோடு வசதியை பயன்படுத்தி கொள்ளவும்.
இவ்வாறு வடக்கு போக்குவரத்து எஸ்.பி., செல்வம் தெரிவித்துள்ளார்.