தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடியோடு முடங்கியது 100 அடி சுரங்கப்பாதை கழிவு நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

அடியோடு முடங்கியது 100 அடி சுரங்கப்பாதை கழிவு நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

அடியோடு முடங்கியது 100 அடி சுரங்கப்பாதை கழிவு நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிப்பு


UPDATED : நவ 02, 2026 07:21 PM

ADDED : நவ 02, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 07:21 PM ADDED : நவ 02, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல கோடியில் கட்டப்பட்ட மேம்பால சுரங்கபாதை சாக்கடைச் சேறாகவும், சகதி நீராகவும் குளம் கட்டி நிற்கின்றது. அபாயத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி 100 அடி சாலையில், ரயில்வே மேம்பாலத்துக்குக் கீழே சுமார் ரூ.5.38 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலை. பாலம் திறக்கப்பட்ட நாளிலிருந்தே அங்கே பிரச்னைகளும் லைன் கட்டி நிற்கத் தொடங்கிவிட்டன. மழை பெய்தால், பாலத்தின் மேல் தளத்திலிருந்து அருவிபோல நீர் கொட்டுகிறது.

‘சரி, மழைக்காலம் முடிந்தால் நிம்மதி கிடைக்கும்’ என்று நினைத்தால், மழை இல்லாத வெயில் நாட்களிலோ... பாலத்தின் தரைப்பகுதியிலிருந்து பூமிக்கு அடியிலிருந்து ஊற்றெடுத்துத் தண்ணீர் குளம்போலத் தேங்கி நிற்கிறது.

இப்போது புதுச்சேரியில் பெருமழை எதுவும் பெய்யவில்லை. ஆனால், 100 அடி சாலைச் சுரங்கப்பாதையின் தரைப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக நீர் சுரந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இதோடு அருகில் உள்ள கழிவுநீரும் கலந்துவர... இப்போது சுரங்கப்பாதையின் நடுப்பகுதியில் துர்நாற்றத்துடன் இடுப்பளவு உயரத்திற்குத் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் காவல்துறை, வேறு வழியின்றி சுரங்கப்பாதையின் நுழைவுவாயிலில் தடுப்புகளைப் போட்டு, போக்கவரத்தை முற்றிலும் தடை செய்துவிட்டது.

பாதை திடீரென மூடப்பட்டதால், அந்த வழியாகச் செல்ல வந்த வாகன ஓட்டிகள் மாற்று வழியைத் தேடி அலைந்து திரிந்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கிடையே விவரம் அறியாத சிலர் தடுப்புகளையும் மீறி உள்ளே சென்று, இடுப்பளவுத் தண்ணீரில் சிக்கித் தவிக்கும் ஆபத்தான சம்பவங்களும் தொடர்கின்றன.

மழை பெய்தாலும் ஆபத்து... வெயில் அடித்தாலும் ஆபத்து என்றால், இவ்வளவு கோடிகளைச் செலவழித்துப் பாலம் கட்டியதன் நோக்கம் என்ன கொதிப்போடு கேட்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். ஒவ்வொரு முறையும் பிரச்னை வரும்போது மோட்டார் வைத்துத் தண்ணீரை வெளியேற்றிவிட்டு, வேலை முடிந்ததே என அதிகாரிகள் கையைக் கழுவிவிடுகிறார்கள். இனிமேலும் இந்தத் தற்காலிக ஆட்டத்தைத் தொடராமல், தரைப்பகுதியில் ஏற்படும் நீர் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை விரைந்து களத்தில் இறங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us