/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் சோதனை
/
போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் சோதனை
ADDED : நவ 21, 2025 05:55 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் முக்கிய பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து மோட்டர் வாகன ஆய்வாளர்கள் உள்ளூர் பஸ்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
போக்குவரத்து உதவி மோட்டர் வாகன ஆய்வா ளர்கள் மற்றும் அமலாக்க உதவியாளர்கள் உள்ளூர் வழித்தடங்களில் இயங்கும் பஸ்களை ஆய்வு செய்தனர். அப்போது ஜிப்மர், ராஜிவ் காந்தி மருத்துவமனை, இந்திரா சதுக்கம், மரப்பாலம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
ஆய்வில் பஸ் கண்டக்டர்களிடம் கட்டண பட்டியல், நேர அட்டவணை உள்ளிட்ட 18 வகையான போக்குவரத்து விதிமுறை ஆய்வறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்.
போக்குவரத்து துறையால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தின்படி, பஸ் டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட நேர அட்டவ ணையை கவனமாக பின்பற்ற வேண்டும். அதனை மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என, எச்சரக்கை விடுத்தனர். தொடர்ந்து எலக்ட்ரிக் பி.ஆர்.டி.சி., பஸ்களை கண்காணித்தனர்.
இதுகுறித்து போக்கு வரத்து வாகன ஆய்வாளர்கள் கூறுகையில், 'புதுச்சேரி மக்களுக்கு அனைத்து பொது சேவை வாகனங்களும் சட்டப்படியும், திறம்படவும் சேவை செய்வதை உறுதி செய்ய, இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்றனர்.

