/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி காரைக்காலில் சோகம்
/
கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி காரைக்காலில் சோகம்
ADDED : ஜன 01, 2025 06:58 AM

காரைக்கால் : காரைக்காலில் கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் இறந்தனர்.
நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது குடும்பத்துடன் காரைக்கால் கடற்கரைக்கு நேற்று வந்திருந்தார். சிவக்குமார் மகன் விஷ்ணு, 17, மகள் பிரியதர்ஷினி,15, ஆகியோர் மதியம் 3:00 மணியளவில் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென இருவரும் அலையில் சிக்கினர்.
அருகில் இருந்தவர்கள் கடலில் இறங்கி பிரியதர்ஷினியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விஷ்ணு கடற்கரை பாறையில் சிக்கி உயிரிழந்தார். புதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் நிசன்ராஜ்,17; பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார்.
இறந்த விஷ்ணு மற்றும் நிசன்ராஜ் ஆகியோர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுக்குறித்து நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.