/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி அலவன்ஸ் உயர்வு
/
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி அலவன்ஸ் உயர்வு
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி அலவன்ஸ் உயர்வு
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி அலவன்ஸ் உயர்வு
ADDED : நவ 26, 2024 05:55 AM
புதுச்சேரி: ஊர்க்காவல் படை வீரர்களுக்கான அணிவகுப்பு, பயிற்சி அலவன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், போலீசாருக்கு உதவும் வகையில், கடந்த 1965ம் ஆண்டு ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. ஊர்காவல் படை வீரர்கள் பிரிவில், எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். ஊர்காவல் படை வீரர்கள், அனைத்து போலீஸ் ஸ்டேஷன், புறக்காவல் நிலையங்களில் டிரைவராகவும், அலுவலக பணி மற்றும் ரோந்து போலீசாருடன் சென்று சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு இணையாக பணியாற்றும் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு தினசரி ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.1085 வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான அணிவகுப்பு, பயிற்சி அலவன்ஸ் உயர்த்தப்படவில்லை.
இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் முறையிட்டு இருந்த சூழ்நிலையில் தற்போது அணிவகுப்பு, பயிற்சி அலவன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது.
2.5 மணி மணி நேர அணிவகுப்பு பயிற்சிக்கு முன்பு 20 ரூபாய் இருந்தது. இது தற்போது 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் 2.5 மணி நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிவகுப்பு நடத்தால் அதற்கான அலவன்ஸ் முன்பு 20 ரூபாய் முன்பு வழங்கப்பட்டது. அது 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கேம்ப் பயிற்சிக்கான பாக்கெட் அலவன்ஸ் முன்பு 8 ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகை 350 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 12 ரூபாயாக இருந்த உணவு அலவன்ஸ் 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.