/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரியில் பயிற்சி முகாம்
/
வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரியில் பயிற்சி முகாம்
வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரியில் பயிற்சி முகாம்
வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரியில் பயிற்சி முகாம்
ADDED : மார் 02, 2024 06:21 AM

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கல்விக் குழுமம் சார்பில், வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரி மாணவர்களுக்கான மூன்று நாள் குடிமைப் பயிற்சி முகாம் நடந்தது.
கல்லுாரி பதிவாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சிந்துலேகா வரவேற்றார். புதுச்சேரி பாரத இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் முகாமினை துவக்கி வைத்து நோக்கவுரையாற்றினார்.
கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லுாரி முதல்வர் டையன் ஜோசப் சிறப்புரை வழங்கினார்.பாரத சாரணர் இயக்க பயிற்சியாளர்கள் முருகையன், ராமு, அந்தோணிசாமி, மோகன்ராஜ், விக்டோரியன் விஜய் பாபு ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
துணைப்பேராசிரியர் ஈவா எழில் மலர் நன்றி கூறினார்.

