ADDED : நவ 23, 2024 06:39 AM

புதுச்சேரி : ஏனாம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்தி நிகழ்ச்சி சர்வ சிக்ஷா அபியான் அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேளாண்துறை இயக்குநர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். ஏனாம், மண்டல நிர்வாகி முனிசாமி முன்னிலை வகித்தார்.
அம்பாஜிபேட்டை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி (பூச்சியியல்) சலபதி ராவ், தாவர நோயியல் நிபுணர் நீரஜா ஆகியோர் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
தென்னை விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த பெரோமோன் பொறிகள் வழங்கப்பட்டன. இதில், 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேளாண் துணை இயக்குநர் சிவ சுப்பிரமணியன், வேளாண் அலுவலர் ஜோகிராஜு, களப்பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

