ADDED : டிச 19, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காமராஜர் வேளான் அறிவியல் நிலையத்தில் பால் பண்ணை, கோழிப் பண்ணை மேலாண்மைக்கான பயிற்சி நடந்தது.
பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இணை இயக்குனர் மரியதாஸ், சித்ரா சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து பயிற்சியில் கொறித்துண்ணிகளால் (எலி, அணில் மற்றும் முயல்) மாட்டுக்கொட்டகை, கோழிக் கொட்டகை, வயல்வெளி ஆகிய இடங்களில் ஏற்படும் தீமைகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

