/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
தொழில்நுட்ப பல்கலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 11, 2025 06:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 'ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் சக்தி' என்ற, தலைப்பில் ஆசிரியர்களுக்கான ஒருவார பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது.
பல்கலைக்கழக கணிப்பொறி துறை மற்றும் பல்கலை அட்டல் இன்குபேஷன் மையம் சார்பில் நடந்த பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சியில் கணினிப்பொறியல் துறைத் தலைவர் இளவரசன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் துவக்கி வைத்து பேசுகையில், வேகமாக வளர்ச்சியடையும் நவீன தொழில் நுட்பத்தை, அனைத்து இளம் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கற்று, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளை இந்த சமூகத்திற்கு அளிக்க வேண்டும். அரசின் உயர்கல்வித்துறை அனுமதி பெற்று, அடுத்த கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியல் துறையில், ஒரு புதிய இளங்கலை பொறியியல் பட்டம் அறிமுகம்ப்படுத்தப்பட உள்ளது என்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை செயற்கை நுண்ணறிவு துறை நிபுணர் ராகவன் தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டு, நவீன துறையின் நுணுக்கங்கள் மற்றும் அதனை பயன்படுத்தக்கூடிய மென்பொருள் சாதனங்கள் குறித்தும் விளக்கினார். பயிற்சி பட்டறையில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, பயிற்சி குறித்து விளக்கினார். கல்வி புல தலைவர் பேராசிரியர் விவேகானந்தன், பதிவாளர் (பொ) சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.