/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கற்பித்தல் கருவிகளை உருவாக்கும் பயிற்சி
/
கற்பித்தல் கருவிகளை உருவாக்கும் பயிற்சி
ADDED : ஜன 02, 2024 05:37 AM

புதுச்சேரி : ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், பயன்படாத பொருட்களை கொண்டு எளிய கற்றல் கற்பித்தல் கருவிகளை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியின் துவக்க விழாவில், விரிவுரையாளர் ராஜசேகரன் வரவேற்றார். விரிவுரையாளர் நடேசன் தொகுத்து வழங்கினார். நிறுவன முதல்வர் சுகுணா சுகிர்தபாய் திடக்கழிவு மேலாண்மை பற்றி விளக்கினார்.
நுண்கலை ஆசிரியர் உமாபதி, 'கலை செய் கற்பி' எனும் தலைப்பில் ஆசிரிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் வாழை நார் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினை பயிற்சி பாடத் திட்டத்திற்கு மாதிரி வடிவத்தை எளிமையான முறையில் செய்வதை மாணவ ஆசிரியர்கள் கற்றனர்.
விரிவுரையாளர் கீதாஞ்சலி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் மாநில பயிற்சி நிறுவனம் செய்திருந்தன.

