/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி
/
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கைவினை பொருள் தயாரிக்கும் பயிற்சி
ADDED : ஜூன் 06, 2025 06:51 AM
அரியாங்குப்பம்; உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, மத்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடத்தியது.
இந்த பயிற்சியில், 60 சுய உதவிக் குழுக்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலார் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.