ADDED : ஜன 23, 2026 05:32 AM

திருபுவனை: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், வாழையில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி மதகடிப்பட்டில் நடந்தது.
வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்றார். மணக்குள விநாயகர் விவசாயக் கல்லுாரி தோட்டக்கலைத்துறை உதவிப்பேராசிரியர் ஆர்த்தி, வாழை சாகுபடி பருவம், ஈடரடி இலையுள்ள கன்றுகள் தேர்வு செய்தல், கன்றுகளின் இடைவெளி மற்றும் கற்பூர வள்ளி, பூவன், மொந்தன், காவேரி வாமன் போன்ற ரகங்கள் சிறந்தது; இலைவழி ஊட்டம் மகசூலை அதிகரிக்கும்' என்றார்.
பூச்சியியல் உதவிப்பேராசிரியர் சரோஜா வாழையில் முடிக்கொத்து வைரஸ் நோய், கூன்வண்டு, அசுவினி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், கோடை உழவு வாடல் நோய் இலைப்புள்ளி நோய்களை தடுக்கும் என, பேசினார்.
மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி தோட்டக்கலை இறுதியாண்டு மா ணவர்கள் கலந்துகொண்டனர். ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார். ஏற்பாட்டினை உதவி வேளாண் அலுவலர்கள் பக்கிரி, புவனேஷ்வரி, ஜெயசங்கர், சண்முகம், சுபாஷ் ஆ கியோர் செய்திருந்தனர்.

