/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரானஸ் கிரேனியல் டாப்லர் கருவி சேவை துவக்கம்
/
டிரானஸ் கிரேனியல் டாப்லர் கருவி சேவை துவக்கம்
ADDED : மார் 15, 2025 09:15 PM

புதுச்சேரி; அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைக்கு, புதிதாக வாங்கப்பட்ட டிரானஸ் கிரேனியல் டாப்லர் கருவி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில், நரம்பியல் துறைக்கு புதிதாக வாங்கப்பட்ட 'டிரானஸ் கிரேனியல் டாப்லர்' எனும் கருவி நேற்று முன்தினம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த கருவி ஒலி அலைகளை பயன்படுத்தி, மூளை ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தின் வேகத்தை அளவிட முடியும். இதன் மூலம், மூளையில் ரத்த ஓட்டம் குறைபாடுகளை கண்டறியவும், ரத்த குழாய் அடைப்பு மற்றும் அதிக ரத்த அழுத்தத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
புறநோயாளிகள் வரும் ஏப்., 15ம் தேதிக்கு பின், மாதத்தின் முதல் மற்றும் 3வது செவ்வாய் கிழமைகளில, மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை இக்கருவி மூலம் பரிசோதனை செய்து கொள்ள முடியும். இதற்காக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு எண்: 31ல் தலைவலிக்கு என பிரத்யேக சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுகிறது என, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தெரிவித்தார்.