sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ''டிரான்ஸ்பருக்கே டிரான்ஸ்பர்'' கில்லாடி காக்கி அதிகாரிகள்

/

 ''டிரான்ஸ்பருக்கே டிரான்ஸ்பர்'' கில்லாடி காக்கி அதிகாரிகள்

 ''டிரான்ஸ்பருக்கே டிரான்ஸ்பர்'' கில்லாடி காக்கி அதிகாரிகள்

 ''டிரான்ஸ்பருக்கே டிரான்ஸ்பர்'' கில்லாடி காக்கி அதிகாரிகள்


ADDED : மார் 15, 2026 04:37 AM

Google News

ADDED : மார் 15, 2026 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகரத்தை விட்டு நகராமல் 'டிரான்ஸ்பர்' ஆர்டருக்கு டிமிக்கி கொடுத்து வரும் புதுச்சேரி போலீஸ் அதிகாரிகளின் செயல் அப்பாவி போலீசாரை எரிச்சல் அடைய செய்துள்ளது.

சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள 17 இன்ஸ்பெக்டர்கள், 26 சப், இன்ஸ்பெக்டர்கள் இடம் மாறுதலுக்கான உத்தரவு வெளியானது.

இந்த டிரான்ஸ்பர் ஆர்டர் வெளியாவதற்கு முன்பே, இந்த பட்டியலில் உள்ள சிலர் தங்களுக்கு வேண்டப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை பார்த்து தங்களுக்கு வேண்டிய ஸ்டேஷன்களாக பட்டியலில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இதனால், பலர், பல ஆண்டுகளாக நகர எல்லையை தாண்டாமல் புதுச்சேரியிலேயே சுற்றி, சுற்றி பணியாற்றி வருவது போலீசாரையே ஆச்சரியப்பட செய்துள்ளது.

உதாரணத்திற்கு பெரியக்கடை ஸ்டேஷனில் இருந்தால் உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, ஒதியஞ்சாலை, கோரிமேடு செல்வார். அதையும் மீறினால் போக்குவரத்து பிரிவு, இல்லை என்றால் இருக்கவே, இருக்கு ஸ்பெஷல் பிராஞ்ச், சிக்மா செக்யூரிட்டி என இவற்றில் ஏதாவது ஒன்றில் இடம் மாறிக் கொள்கின்றனர்.

தப்பித்தவறி கூட காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளுக்கு மாற்ற முடியாதபடி தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகளையே திகைக்க வைப்பார். தற்போது போட்ட ஆர்டரிலும் என்னால் இடம் மாறி போக முடியாது என பழைய இடத்திலேயே ஒருவர் நகராமல் உள்ளார்.

இதில், உச்சகட்டம் என்னவென்றால் சில போலீஸ் அதிகாரிகளின் மனைவிகள் அரசு பணியில் உள்ளனர். இவர்களையும் பணியிடம் மாற்றம் செய்யப்படாமல் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தாங்கள் பணி செய்யும் ஸ்டேஷன் எல்லைப் பகுதிக்குள்ளேயே இருக்குமாறு பார்த்துக் கொள்வதுதான்.

இவர்களின் அசாத்திய திறமையை என்னவென்று சொல்வது. ஆனால் எந்த சிபாரிசும் கிடைக்காத அப்பாவி போலீசார் காரைக்கால், மாகே, ஏனாம் என மாறி சென்று பணியாற்றுவது பரிதாபமாக உள்ளது.






      Dinamalar
      Follow us