/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
/
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
ADDED : மே 24, 2025 03:19 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 14 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாகே கடலோர காவல்படையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சண்முகம், மேற்கு போக்குவரத்திற்கும், மேற்கு போக்குவரத்தில் பணியாற்றிய செந்தில்கணேஷ் சிக்மா செக்யூரிட்டி பிரிவிற்கும், ஆயுதப்படையில் பணியாற்றிய முருகன் சிக்மா செக்யூரிட்டிக்கும், சிக்மா செக்யூரிட்டியில் பணியாற்றிய ரகுபதி போலீஸ் தலைமை ஸ்டோர், சிக்மா செக்யூரிட்டியில் பணியாற்றிய பங்கஜாக் ஷன், போலீஸ் பயிற்சி பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், லாஸ்பேட்டையில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் அனுஷா பாஷா கிழக்கு போக்குவரத்திற்கும், அங்கு பணியாற்றிய குமார் லாஸ்பேட்டைக்கும், மேற்கு போக்குவரத்தில் பணியாற்றிய அன்பழகன் ஆயுதப்படைக்கும், ஆயுதப்படையில் பணியாற்றிய சந்திரசேகரன் மேற்கு போக்குவரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், ஒரு உதவி சப் இன்ஸ்பெக்டர், 3 தலைமை காவலர், ஒரு காவலர் என, மொத்தம் 14 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ் வெளியிட்டுள்ளார்.