/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
/
இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
ADDED : ஜூன் 07, 2025 02:16 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியாங்குப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், வில்லியனுாருக்கும், அங்கிருந்த ஆறுமுகம் அரியாங்குப்பத்திற்கும் மாற்றப்பட்டனர்.
புதுச்சேரி ஆயுதப்படை பிரிவு எஸ்.ஐ., ஜெயகுருநாதன், தவளக்குப்பம் ஸ்டேஷனுக்கும், மாகி கடலோர காவல் படை எஸ்.ஐ., சுரேஷ்பாபு, பள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், பள்ளூர் எஸ்.ஐ., ரெனில்குமார், மாகி போலீஸ் ஸ்டேஷனுக்கும், அங்கிருந்த அஜய்குமார், மாகி கடலோர காவல் படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மாகி கடலோர காவல் நிலைய எஸ்.ஐ., ஹரிதாஸ், புதுச்சேரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக கண்காணிப்பாளர் சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.