UPDATED : நவ 21, 2026 11:30 PM
ADDED : நவ 21, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காவல் துறையில் உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், ஊர்காவல்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்காவல்படை பிரிவு இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, போலீஸ் ஆப் போலீஸ் (பிஒபி)க்கும், கூடுதலாக மோட்டார் வாகன பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வெளிநாட்டினர் பதிவு அலுவலக இன்ஸ்பெக்டர் சண்முகம், புதுச்சேரி கவால்துறை தலைமையக இன்ஸ்பெக்டர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க வேண்டும். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.
