UPDATED : நவ 21, 2026 11:30 PM
ADDED : நவ 21, 2026 11:30 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கவிஞர் தமிழ்ஒளி கல்வி வட்டம் சார்பில், முனைவர் இளங்கோ எழுதிய அஸ்வகோஷ் நுால் வெளியீட்டு விழா புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடந்தது.
ஜானி வரவேற்றார். லெனின்துறை தலைமை தாங்கினார். எழுத்தாளர்கள் ராமமூர்த்தி, யூஜின் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரம் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
லியாகத் அலி நுால் வெளியிட, பொறியாளர் பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார். முத்துவேல் ராமமூர்த்தி நுால் அறிமுகரை உரையாற்றினார். புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் தலைவர் பாவாணன் சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை சரவணன், ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
