/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்நடை துறை அதிகாரிகள் இடமாற்றம்
/
கால்நடை துறை அதிகாரிகள் இடமாற்றம்
ADDED : அக் 31, 2025 02:11 AM
புதுச்சேரி:  கால்நடை மருத்துவர்கள் பதவி உயர்வினை தொடர்ந்து கால்நடை துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்காலிக பொறுப்பு அடிப்படையில் பணியினை கவனித்து வந்த கால்நடை துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர், இனி கூடுதல் அடிப்படையில் அப்பொறுப்பினை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருந்தக பிரிவு இணை இயக்குநர் ராஜிவ் ரவுண்ணியரத், இணை இயக்குநராக கால்நடை துறை நிர்வாக பணியினை கவனிப்பார்.
அத்துடன் அவருக்கு மாநில கால்நடை கவுன்சில் பதிவாளர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
கால்நடை அபிவிருத்தி பிரிவு இணை இயக்குநர் செந்தில்குமார் கால்நடை மருத்துவ கல்லுாரி நிர்வாக துணை பதிவாளராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோழி அபிவிருந்தி பிரிவு இணை இயக்குநர் குமாரவேல், கால்நடை உற்பத்தி பிரிவு இணை இயக்குநராகவும், காரைக்கால் இணை இயக்குநர் கோபிநாத், கால்நடை அபிவிருத்தி பிரிவு, கால்நடை தீவன பிரிவு இணை இயக்குநர் அன்புக்கரசு கூட்டுறவு துறையின் பால்வள பிரிவுக்கும், கால்நடை உற்பத்தி பிரிவு இணை இயக்குநர் குமரன், கால்நடை மருந்தக பிரிவு இயக்குநராகவும், கால்நடை நோயியல் பிரிவு இணை இயக்குநர் காந்திமதி, கோழி அபிவிருத்தி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவினை இணை செயலாளர் பத்மநாபன் சுந்தரராஜன் பிறப்பித்துள்ளார்.

