ADDED : ஆக 12, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை தாலுகா பகுதியில் 63 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
உழவர்கரை தாலுகா பகுதியில் முழு பட்ட மாற்றம் செய்ய கடந்த 2022–23ம் ஆண்டில் 63 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு பட்டா மாற்றம் செய்து, வழங்கும் நிகழ்ச்சி இ.சி.ஆரில் உள்ள உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் தயானந்த் டெண்டுல்கர், நில அளவை மற்றும் பதிவேடுத்துறை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில், தாசில்தார் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
