ADDED : நவ 08, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் 3 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 17 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி, சப் இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து சிக்மா செக்யூரிட்டி பிரிவுக்கும், சிவசுப்ரமணியன் வில்லியனுார் போலீஸ் நிலையத்தில் இருந்து வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும், குப்புசாமி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் 2 உதவி சப்இன்ஸ்பெக்டர், 2 சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு நிலை ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

