ADDED : ஜூலை 23, 2025 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : ஏம்பலம் தொகுதி, பிள்ளையார்குப்பம் கிராமத்தில் குறைவான மின் அழுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
மின்சாரம் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பரிந்துரையின் பேரில், பிள்ளையார்குப்பம் கிராமத்தில், 23 லட்ச ரூபாய் செலவில், புதிதாக கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது.
இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பங்கேற்று, பூஜைகள் செய்து, டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். மின்துறை உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

