/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநங்கைகள் நினைவு தின மெழுகுவர்த்தி ஊர்வலம்
/
திருநங்கைகள் நினைவு தின மெழுகுவர்த்தி ஊர்வலம்
ADDED : நவ 24, 2025 05:44 AM

புதுச்சேரி: பாலின வேறுபாடுகளுக்கு எதிரான வன்முறைச் செயல்களால் இறந்தவர்களை கவுரவிக்கும் வகையில் திருநங்கைகள் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.
சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு, மரிவாலா சுகாதார முன் முயற்சி அமைப்பு சார்பில், நடந்த திருநங்கைகள் நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை அரியாங்குப்பம் தனியார் திருமண நிலையம் எதிரே காங்., மாநில செயலாளர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் திருநங்கைகள் கூட்டமைப்பு நிறுவனர் ஷீத்தல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று மெழுகுவர்த்தி மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்து, அண்ணா சிலை அருகே இறந்தவர்களின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

